close
Choose your channels

காஜல் அகர்வாலின் முதல் உதட்டு முத்தத்தில் ஒளிந்துள்ள ரகசியம்

Tuesday, May 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட், டோலிவுட் ஆகிய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் இதுவரை முத்தக்காட்சியில் குறிப்பாக லிப்கிஸ் காட்சியில் நடித்ததில்லை. விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் ஒரு முத்தக்காட்சி வருவது போல் தோன்றும். ஆனால் வராது. இந்நிலையில் பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்த காஜல் அகர்வால் அவருக்கே தெரியாமல் ஒரு லிப்கிஸ் காட்சியில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரன்தீப் ஹூடா, காஜல் அகர்வால் நடித்து வரும் ரொமான்ஸ் படம் Do Lafzon Ki Kahani`. தீபக் டிஜோரி இயக்கி வரும் இந்த படத்தின் எமோஷலான காதல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது திடீரென ரன்தீப், காஜல் அகர்வாலுக்கு உதட்டு முத்தம் கொடுத்ததாகவும், இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல் அதிர்ச்சியாகி உடனே தன்னை விடுவித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்சி குறித்து காஜல் அகர்வாலிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காஜல், இந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டின்படி இந்த காட்சி முக்கியமானது என்று கூறி காஜலை இயக்குனர் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் காஜலின் லிப்கிஸ் காட்சி இடம்பிடித்துள்ளதா? இல்லையா? என்பதை படம் பார்த்துதான் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment